tamilnadu

img

விளைநிலம் வழியே பெட்ரோலிய குழாய் அமைக்க அனுமதிக்காதே விவசாயிகள் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம்

தருமபுரி, செப். 9- பாரத் பெட்ரோலியத்தின் ஐடி பிஎல் திட்டத்தை வேளாண் விளை நிலங்கள் வழியாக செயல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தருமபுரி, சேலம், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனு  கொடுக்கும் போராட்டம் நடைபெற் றது. பாரத் பெட்ரோலிய நிறுவனம் கோவை இருகூரிலிருந்து பெங்களூர் அருகில் உள்ள தேவனகுந்தி வரை  ஐடிபிஎல் என்ற பெயரில் எண்ணெய்  குழாய் அமைக்கும் திட்டத்தை செயல் படுத்தி வருகிறது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட் டங்களில் வேளாண் விலைநிலங் களை கையகப்படுத்தும் வேலையை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இவ்வாறு வேளாண் நிலங்கள் வழி யாக ஐடிபிஎல் எண்ணெய் குழாய் பதிக்கப்பட்டால் பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்படும். இத னால் ஆயிரக்கணக்கான கிராமப்புற விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். முன்னதாக, கடந்த 2013 ஆம்  ஆண்டு கெயில் குழாய் திட்டத்தை விவசாய நிலங்கள் வழியாக கொண்டு  செல்வதை தடுத்து நிறுத்தி சாலையோ ரமாக அமைக்கப்படும் என அன்றைய தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். எனவே, பாரத் பெட்ரோலிய ஐடிபிஎல் திட்டத்தை யும் சாலையோரமாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திங்க ளன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு  கொடுக்கும் போராட்டம் நடைபெற் றது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு மாநில பொருளா ளர் கே.பெருமாள் தலைமை வகித் தார். மாவட்ட தலைவர் கே.என்.மல் லையன், மாவட்ட செயலாளர் எம்.ஆறுமுகம், மாவட்ட நிர்வாகிகள் எஸ்.எஸ்.சகன்ராஜ், தீர்த்தகிரி, அன்பு,  சக்திவேல், இபி.பெருமாள் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் நல்லம்பள்ளி, கே.குப்புசாமி, இண்டூர் பி.டி.அப்புணு, பாப்பாரப்பட்டி ஆர்.சின்னசாமி ஆகியோர் வாழ்த்தி பேசி னர். போராட்டத்தின் முடிவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
சேலம்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகே தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்ட செயலாளர் எ.ராமமூர்த்தி தலைமையில் விவ சாயிகள் மனு கொடுக்கும் போராட் டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட் டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் டி. ரவீந்திரன், திமுக விவசாய தொழி லாளர் அணி இணைச் செயலாள ரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பி னருமான வை.காவேரி, கொங்கு சர வணன், மல்லயகுந்தம் முன்னாள்  ஊராட்சி மன்ற தலைவர் வி.வைத்திய லிங்கம், விவசாய வாழ்வாதார உரிமை சங்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.கே.மாதேஸ்வரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க சேலம் மாவட்ட பொருளாளர் அன்பழகன், துணைத் தலைவர் டி. தங்கவேலு உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் பங்கேற் றனர்.
நாமக்கல் 
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் நடைபெற்ற போராட் டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் கே.முகமதுஅலி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பி.பெருமாள், மாவட்ட பொருளாளர் மு.து.செல்வ ராஜ், மாவட்ட உதவிச் செயலாளர் ஆர்.வேலாயுதம், கிருஷ்ணன், சதா சிவம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;