districts

img

இலவச வீட்டு மனை பட்டா கேட்டு விதொச மனு கொடுக்கும் போராட்டம்

விழுப்புரம்,பிப்.27- விழுப்புரம் மாவட்டம், நன்னாட்டாம் பாளையம், சுந்தரிபாளையம், எம்ஜிஆர் காலனி, நடுக்காலனி, ஆழங்கால்மேடு, மழவராயனூர் ஆகிய இடங்களில் வாழும் 300 குடும்பங்களுக்கு உடனடியாக வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும். 1977 ஆம் ஆண்டில் நடந்த சாதி கலவரத்தால் பாதிக்கப்பட்ட நன்னாட்டம் பாளையம் பழைய காலணிக்கு சொந்த மான குடியிருப்பு நிலங்கள் சர்வே நம்பர் 49 ன,50,51, சுடுகாடு,சுடுகாட்டுப் பாதை சர்வே எண் 37 மந்தவெளி மைதானம், சேரி நத்தம், கோயில் மானியம் ஆகிய ஆக்கிரமிப்புகளை ஆக்கிரமிப்பு கும்ப லிடமிருந்து மீட்டு கொடுக்க வேண்டும். மேலும், இந்த கிராமத்திலுள்ள 200 ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்டு கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் முன்பு  மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. டி.வைகுந்தவாசன் தலைமை தாங்கி னார். மாவட்டத் தலைவர் வி.அர்ச்சுணன், செயலாளர் கே.சுந்தரமூர்த்தி, ஜி.ராஜேந்திரன், அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.கண்ணப்பன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். பின்னர், துணை வட்டாட்சியர் லட்சாதி பதியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.