திருச்சிராப்பள்ளி, ஜூலை 20 - திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் கோம்பை ஊராட்சி யில் தானூர், மருதை, செம்புளிச்சான்பட்டி, போந்தை, மேலூர் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு நூறு நாள் வேலைத்திட்டத்தில் வேலை வழங்க வேண்டும். குடிநீர், சாலை வசதி உள்பட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் செவ்வாய்க் கிழமை துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு சங்க செயலாளர் ஜெயந்தி தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்ரமணியன், ஒன்றியச் செயலாளர் ஆனந்தன், சங்கிலிதுரை, அசோக்குமார், பொன்னுசாமி ஆகியோர் பேசினர். பின்னர் 300-க்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் வழங்கினர். மனுக்களை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.