tamilnadu

img

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு கடன் வழங்குக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

தருமபுரி, டிச.7- தமிழ்நாடு விவசாயிகள்  சங்கத்தின்  தருமபுரி மாவட் டக்குழு கூட்டம்சனியன்று மாவட்ட தலைவர் கே.என்.மல்லையன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில துணைத்தலைவர் டி.ரவீந்திரன் மற்றும் மாவட்டக்குழு உறுப்பி பினர்கள் கலந்து கொண் டனர்.  இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தருமபுரி மாவட்டச் செயலாளராக சோ. அருச்சுணன் தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு,  தருமபுரி மாவட்டத்தில்  தொடர் மழை யின் காரணமாக மாவட்டத்தின் சிலபகுதி களில் விவசாய பயிர்கள், மானாவரி பயிர்கள் சேதமடைந்துள்ளது. இதனால் சிறு,குறு விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பிரதான மந்திரி பசல்  யோஜனா திட்டத்தின் கீழ் உரிய நிவா ரணம் வழங்க வேண்டும். பாலக்கோட்டில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில் சில ஆண்டுகளாக ஆலை நிர்வாகம் கரும்பு  விவசாயிகளுக்கு கொள்முதல் பாக்கி  வைத் துள்ளது. எனவே, பாலக் கோடு சர்க்கரை ஆலைக்கு உட்பட்ட கரும்பு உற் பத்தி விவசாயிகளுக்கு நிலுவை கொள்முதல் பாக்கி, ஊக்கத்தொகை வழங்கி கரும்பு உற்பத்தி யை ஊக்குவிக்க  மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். தற்போது மாவட் டத்தில் தொடர்ந்து மழைபெய்துள்ள சூழ்நிலையில் கூட்டு றவு வங்கிகளில் விவசாயிகளுக்கு பயிர் கடன்  வழங்கவேண்டும். மேலும், விவசா யத்திற்கு இலவச மின் இணைப்பு கேட்டு குறைந்தது 25 ஆண்டுகாலமாக காத்தி ருக்கும் சூழ்நிலை உள்ளது. இந்த நிலையை போக்கி விவசாயிகளுக்கு உடனடியாக இலவச மின் இணைப்பு கிடைக்க நடவ டிக்கை எடுக்கவேண்டும். கால்நடை  வளர்ப்பில் அதிகமாக உள்ள இந்த மாவட் டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி உள் ளிட்ட பல்வேறு நோய்கள் தாக்கி வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் முகாம்  அமைத்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும்.மாவட்டத்தில் கால்நடை  கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. 

;