tamilnadu

img

தருமபுரி அரசு கலைக்கல்லூரி மாணவர்களுக்கு அரசு விடுதி ஏற்படுத்திடுக வாலிபர் சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு

தருமபுரி, பிப். 10- தருமபுரி அரசு கலைக் கல்லூரிக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியி டம் மனு அளித்தனர். தருமபுரி அரசு கலைக் கல்லூரிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அம்ம னுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியில் அடிப்படை வசதி இல்லாமல் மாணவ, மாணவிகள் அவ திப்பட்டு வருகின்றனர். வகுப்ப றையில் நாற்காலிகள் உடைந்து பராம ரிப்பின்றி உள்ளது.கழிப்பறையின் கதவு,ஜன்னல்கள் உடைந்து மாணவி களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது.  மேலும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். துப்புரவு பணியா ளர்களை நியமிக்க வேண்டும். மாண வர்களை தாகாத வாரத்தைகளால் திட் டுவதையும்,மிரட்டுவதையும் பேராசி ரியர்கள் செய்து வருகின்றனர். எனவே மாணவர்களை மிரட்டும் போக்கை கைவிட வேண்டும். மாணவர்களுக்கு உணவகம் அமைத்து குறைந்த விலை யில் வழங்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு தனிவிடுதி ஏற்ப டுத்த வேண்டும். நூலகம் அமைத்து தர வேண்டும். கல்லூரி நேரத்தில் மதியம் 1 மணி முதல் மாலை 2:30 வரை பேருந்து இயக்க வேண்டும்.  மேலும் பேராசிரியர் காலிபணியிடங்களை நிரப்பவேண்டும். கௌரவ விரிவுரை யாளர்களுக்கு கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சி யரிடம் முறையிட்டனர்.