தருமபுரி, ஜூன் 25- தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி, சின் னாறு அணை வறட்சியின் பிடியில் சிக்கி உள்ள தால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்ப டும் அபாயம் ஏற்பட்டுள்ளது நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை 40 சதவிகிதத் திற்கும் குறைந்த அளவே பெய்ததால் அணைக்கு போதிய நீர் வரவில்லை. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம், தளி, தேன்க னிக்கோட்டை, அஞ்செட்டி உள்ளிட்ட பகுதி களில் குறைந்த மழை அளவால் அணைக்கு வரவேண்டிய உபரிநீரும் வரவில்லை. இத னால் அணையில் இருக்கும் நீரின் அளவு படிப் படியாகக் குறைந்து வருகிறது. இந்த அணை மூலம் மாரண்டஅள்ளி, பாலக்கோடு உள் ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சுமார் 5 ஆயிரத்திற் கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயத்திற்கு நீர் பாய்ச்சப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது ஏற்பட்ட வறட்சியால் சின்னாறு அணையை நம்பி விவசாயம் செய்யப்பட்ட நெல், கரும்பு, கத்தரி, தக்காளி, ராகி உள் ளிட்ட காய்கறிகள் மற்றும் பூ வகைகள் அதிக அளவில் பாதிப்படைந்து, இன்னும் சில நாட்களில் இப்பகுதி வறண்ட நிலமாக மாறும் அபாயமும், மாரண்டஅள்ளி, பாலக் கோடு ஆகிய பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உள்ளது என அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரி விக்கின்றனர். மேலும், இப்பகுதி விவசாயிகளின் தண் ணீர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண என்னேகோல் புதூர் தடுப்பணை திட்டம், தூள்செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம், தொல்லைகாது அணை திட்டம் போன்ற திட்டங்களை நிறைவேற்றி, பாலக் கோடு தொகுதி மக்களின் குடிநீர் பிரச்சினை மற்றும் விவசாயத்திற்குத் தேவையான தண்ணீர் பிரச்சினையை தீர்க்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.