தருமபுரி:
ஏழு மாதங்களுக்குப் பிறகு தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒகேனக்கலில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த 7 மாதங்களாக சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் வர அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில், ஒகேனக்கல் அருவிக்கு வர சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், பரிசலில் செல்லவும், மசாஜ் செய்து கொள்ளவும் அனுமதி வழங்கப்படுவதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி அறிவித்துள்ளார்.