tamilnadu

img

காட்டில் திருந்திய குட்டி இளவரசன்

ஒரு ஊரில் ஒரு ராஜா ராணி வாழ்ந்து வந்தார்கள் அவர்களுக்கு ஒரு குட்டி இளவரசன் இருந்தான். அவன் ஒரு நாள் காட்டுக்குள் வேட்டையாடச் சென்றான் வழிதவறி வெகுதூரம் சென்று விட்டான்.

அப்போது காட்டுக்குள் விலங்குகள் சத்தம் போட்டது அப்போது குட்டி இளவரசனுக்கு பயம் வந்தது. விலங்குகள் எல்லாம் ஒன்றுகூடி இளவரசனுக்கு பக்கத்தில் வந்தது. அப்போது ஒரு சிங்கம், "விலங்குகளே அவனை விட்டு விடுங்கள் அவன் சிறியவன் வழி தவறி காட்டுக்குள் வந்து இருப்பான், அதனால் அவனை விட்டு விடுவோம்." என்றதாம் எல்லா விலங்குகளும் கூடிப்பேசி "ஆம் அதுதான் சரி இவன் சின்ன பையன் அறிவுரை சொல்லி நாட்டுக்குள்ளே அனுப்பி வைக்கலாம்" என முடிவெடுத்தனர்.பின்பு குட்டி இளவரசனுக்கு காட்டில் விளைந்த இனிப்பான பழங்களை சாப்பிடக் கொடுத்தனர் "இனிமேல் வேட்டையாடாமல் விளையாடு" என அறிவுரை சொல்லி டாட்டா சொல்லி நாட்டுக்குள் வழி அனுப்பிவிட்டனர்.

நாட்டுக்குள் ராஜா ராணி தளபதி மற்றும் படைகள் ஆயுதங்களோடு காணாமல் போன குட்டி இளவரசனை தேடி காட்டுக்குள் செல்ல தயாராக இருந்தனர்.அப்போது ராஜா "காட்டை அழித்து குட்டி இளவரசனை கண்டுபிடியுங்கள்" என அனைவருக்கும் உத்தரவிட்டார்.திடீரென "அப்பா நான் வந்துட்டேன்" என குட்டி இளவரசனின் சத்தம் கேட்டது அனைவரும் ஆச்சரியத்துடன் நடந்த விஷயங்களைக் கேட்டு மகிழ்ந்தனர்.அப்போது இளவரசன் "இனிமேல் நான் காட்டு விலங்குகளை வேட்டையாட மாட்டேன்" என்றும் "நமது மக்கள் யாரும் இனிமேல் வேட்டையாடக் கூடாது" எனவும் குட்டி இளவரசன் உத்தரவிட்டான். குட்டி இளவரசன் சொன்னபடியே அனைவரும் செய்து சந்தோஷமாக வாழ்ந்து மகிழ்ந்தார்கள். காட்டையும் விலங்குகளையும் பாதுகாத்தார்கள்.