tamilnadu

முட்டைகளுக்கு அதிக விலை நிர்ணயமா?

நாமக்கல், மே 28-நாமக்கல் மண்டலத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு முட்டைக்கு அதிக விலையை நிர்ணயம் செய்துள்ளதால் பண்ணைகளில் முட்டைகள் தேக்கமடைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுதொடர்பாக பேசிய நாமக்கல்மண்டல முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் மோகன், பண்ணை யாளர்களின் கருத்தை கேட்காமல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என குற்றம்சாட்டினார். ஹைதராபாத், பெங்களூருவை ஒப்பிடுகையில் நாமக்கல் மண்டலத்தில் 70 பைசா வரைமுட்டை விலை அதிகம் உள்ளதாக அவர் கூறினார். இந்த விலை உயர்வுகாரணமாக பொதுமக்கள் முட்டை வாங்குவதை தவிர்ப்பதால் பண்ணை களில் முட்டைகள் அதிகளவில் தேங்கி விலை சரிவை சந்தித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.