இயந்திரங்கள், பஞ்சு, நூல் முற்றிலும் எரிந்து நாசம்
திருப்பூர், மார்ச் 3- பல்லடம் அருகே பூமலூ ரில் உள்ள நூற்பாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத் தில் இயந்திரங்கள், பஞ்சு, நூல் மூடைகள் எரிந்து நாச மானது. ஐந்துக்கும் மேற் பட்ட தீயணைப்பு வாகனங் கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே மங்க லம் சுல்தான்பேட்டையைச் சேர்ந்தவர் சிவபிரகாஷ். இவர் பூமலூர் கூட்டுறவு சொசைட்டி அருகே திருப்பூர் பாரப்பாளை யத்தைச் சேர்ந்த செந்தில் வடிவு என்பவ ருக்கு சொந்தமான நிலத்தில் கட்டிடம் கட்டி நில வாடகைக்கு ஸ்ரீ பாரதி டெக்ஸ் என்ற பெயரில் நூற்பாலை நடத்தி வருகி றார். இதில் தென் மாவட்டம் மற்றும் உள்ளூரைச் சேர்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் செவ்வாயன்று தொழி லாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது பஞ்சு அரவை இயந்திரத்தில் இருந்து திடீரென புகை வந்ததால், தொழிலாளர்கள் அனைவரும் அங்கிருந்து உடனடியாக வெளியேறினர். இதனிடையே காற்றின் வேகம் காரணமாக உள்ளே தீ கொளுந்து விட்டு எரிந்து விரைவாக அனைத்துப் பகு திக்கும் பரவத் தொடங்கியது. இகுறித்து தகவலறிந்து பல்லடம், திருப்பூர், அவினாசி பகுதிகளில் இருந்து தீயணைப்பு மீட்புப் படை வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றன. அத்துடன் தனியார் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் போராடி இந்த தீ அணைக்கப் பட்டது. எனினும் இந்த பயங்கர தீ விபத் தில் பஞ்சு பேல் மூடைகள், இயந்திரங்கள், உதிரிபாகங்கள், கட்டிடம் உள்ளிட்டவை முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. இந்த தீ விபத்து குறித்து மங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பூமலூர் வட் டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது.