பேராவூரணி, டிச.29- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு மருத்துவ மனையில், வியாழனன்று காலை மின் கசிவு காரணமாக நோயாளிகளை பரிசோதிக்கும் அறையில் இருந்த மின் விசிறி தீப்பிடித்து எறிந்தது. இதையடுத்து அங்கே இருந்த நோயாளிகள், மருத்து வர்கள் பதறி அடித்து வெளியே ஓடினர். அரசு மருத்துவ மனையில் மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்டது. மேலும் பேராவூரணி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இதனால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. பேராவூரணி அரசு மருத்துவமனை கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில் இதுவரை மரா மத்து பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததே இந்த தீ விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. எனவே மருத்து வமனையை முற்றிலும் சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.