பண்ருட்டி, செப். 16- பண்ருட்டி காவல் லைன் 6ஆவது தெருவை சேர்ந்தவர் இஸ்மாயில். இவருக்கு சொந்தமான முந்திரி எண்ணெய் தயாரிக் கும் நிறுவனம் பண்ருட்டி அடுத்த பணிக்கன் குப்பம், ஆண்டிகுப்பம் வீராணம் தெருவில் உள்ளது. இந்த நிறுவனத்தை விழுப்புரம் வண்டி மேடு பகுதியை சேர்ந்த கஜேந்திரன் (47) என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். வழக்கம் போல வியாழக் கிழமை இரவு வேலை முடிந்து ஆலையை பூட்டிக் கொண்டு வீட்டுக்கு சென்ற னர். நள்ளிரவு 1 மணியள வில் முந்திரி எண்ணெய் ஆலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பண்ருட்டி, நெல்லிக்குப்பம், கடலூர், முத்தாண்டிகுப்பம் ஆகிய தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்த னர். இந்த தீ விபத்தில் 1,500 மூட்டை முந்திரி, 500 லிட்டர் முந்திரி எண்ணெய் உள் ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இது குறித்து பண்ருட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.