சென்னை, மே 17-ஜூன் 8 ஆம் தேதி நடைபெறவிருந்த பி.எட் தேர்வு ஜூன் 13 ஆம் தேதி பிற்பகலுக்கு மாற்றப்பட்டுள்ளது.‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாள் தேர்வு ஜூன் 8 ஆம் தேதியன்று நடைபெறுகிறது. இதே தேதியில் பி.எட். தேர்வு நடைபெறவிருப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. டெட் தேர்வை பி.எட் இரண்டாம் ஆண்டு படிக்கக்கூடிய மாணவர்களும் எழுதுவதற்கு தகுதி உடையவர்கள்.இந்நிலையில், பி.எட் இரண்டாம் ஆண்டு மாணவர்களின் மொழித் தாள் தேர்வானது, டெட் தேர்வு நடைபெறும் தேதியில் நடைபெற இருந்ததால், பி.எட் தேர்வு எழுதுவதா அல்லது டெட் தேர்வை எழுதுவதா என பி.எட் மாணவர்கள் குழப்பம் அடையும் நிலை ஏற்பட்டது. எனவே, தேதிகளை மாற்றி அமைக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில், ஜூன் 13 ஆம் தேதிக்கு பி.எட் தேர்வை மாற்றி உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா உத்தரவிட்டுள்ளார்.