tamilnadu

img

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் சட்டத்தில் மாறுபடும் உரிமை சட்டமன்றத்துக்கு உண்டு

கேரள சபாநாயகர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் பேட்டி

திருவனந்தபுரம், ஜன.28- நாடாளுமன்றத்தில் நிறை வேற்றும் சட்டத்திலிருந்து மாறுபட்ட கருத்து கூறும் உரிமை சட்டமன்றத்து க்கு உள்ளது. அது இந்திய கூட்டாட்சி தத்துவத்தின் பகுதி எனவும், எனவே குடியுரிமை திருத்த சட்டம் குறித்து சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதில் தவறில்லை எனவும் கேரள சபாநாயகர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் தெரிவித்தார். கேரள சட்டமன்ற கூட்டத்தொடர் புத னன்று தொடங்க உள்ளது. அதை யொட்டி செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: மாநிலத்தின் கொள்கையை வகுத்து, கொள்கை உரையை அமைச்சரவையே அங்கீகரிக்க வேண்டும். அமைச்சரவை ஏற்றுக்கொண்டு அறிவிக்கும் கொள்கையே கேரள அரசின் கொள்கை. அந்தக் கொள்கையை சமூகத்திற்கு தெரியப்படுத்த ஆளுநர் கடமைப் பட்டவர். அதையே அவர் செய்ய வேண்டும்.

பிரிவு 130 இன் கீழ் ஒரு தீர்மானம் ஏற்றுக்கொள்ளத்தக்கது என்று சபாநாயகர் முடிவு செய்துள்ளார். அத்தகைய ஒரு தீர்மானம் வரும்போது அதனை சபையில் கொண்டுவருவதற்கு தேவையான வழிமுறைகள் உள்ளன. சட்டத்தில் அதுவும் தெளிவாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அந்த வழிமுறை கள் பின்பற்றப்படும் என்பதே தெரி விக்கப்பட்டுள்ளது. ஒரு தீர்மானத்தின் உள்ளடக்கத்தைப் பொறுத்தவரை சபாநாயகர் கருத்து தெரிவிக்க வேண்டிய தில்லை. அதன் நடைமுறைகளில் பிழை உள்ளதா என்பதுதான் பிரச்சனை. காகிதம் இல்லா சட்டமன்றம் என்கிற குறிக்கோளின் துவக்க நடவடிக்கைகள் இந்த கூட்டத்தின்போது ஆரம்பமாகும். அதன் பகுதியாக ஆளுநரின் உரை, பட்ஜெட் உரை போன்றவை டிஜிட்டல் வடி வத்தில் முன்வைப்பதற்கான தயாரிப்பு கள் நிறைவடைந்துள்ளன. இது சட்ட மன்றம் மற்றும் அரசாங்கத்தின் பணி களை ஒருங்கிணைக்க ஒரு பெரிய ஏற்பாட்டின் துவக்கமாகும். இவ்வாறு சபாநாயகர் தெரிவித்தார்.

;