tamilnadu

img

ரஜினியின் "தர்பார்" படத்தை இணையத்தில் வெளியிட தடை  

சென்னை 
நட்சத்திரம் இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த "தர்பார்" திரைப்படம் வியாழனன்று வெளியானது. ரஜினி ரசிகர்களின் வழக்கமான கொண்டாட்டத்திற்கு நடுவே படம் ரிலீசான இந்த படத்திற்கு தமிழக அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கியது. இந்நிலையில் படத்தை தயாரித்த லைக்கா (LYCA) நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் "தர்பார்" படத்தை இணையதளங்களில் வெளியிடுவதற்குத் தடை கோரி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு வியாழனன்று விசாரணைக்கு வந்த நிலையில், "தர்பார்" படத்தை இணையதளங்களில் (1,370 வெப்சைட்டில் மட்டும்) வெளியிடத் தடை விதித்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. எனினும் தமிழ் ராக்கர்ஸ் நிறுவனம் "தர்பார்" படத்தைக் காலையிலே இணையத்தில் வெளியிட்டுப் படக்குழுவிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.  

;