tamilnadu

img

11 மாநில முதல்வர்களுக்கு பினராயி விஜயன் கடிதம்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஒன்றிணைய 11 மாநில முதல்வர்களுக்கு பினராயி விஜயன் கடிதம்

திருவனந்தபுரம், ஜன.4- குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரள சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதுபோன்ற நடவடிக்கையை எடுக்கக் கோரியும் ஜனநாயகத்தையும், மதச்சார்பின்மையை யும் பாதுகாக்கவும் ஒன்றிணைந்து செயல்பட தில்லி, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், பீகார் உள்ளிட்ட 11 மாநிலங்களின் முதல்வர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி, கேரள சட்டப் பேரவை யில் கடந்த செவ்வாயன்று (டிச.31) தீா்மானம் நிறை வேற்றப்பட்டது. ஆளும் இடது ஜனநாயக முன்னணி யும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் இணைந்து நிறை வேற்றிய தீா்மானம் முன்னுதாரணமாக நாட்டுக்கே அமைந்தது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு, மேற்கு வங்கம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள போதிலும், கேரள சட்டப் பேரவையில்தான் முதன்முதலாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதையொட்டி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், மகா ராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, பீகார் முதல்வர் நிதீஷ் குமார், ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி, மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத், பஞ்சாப் முதல்வர் அமரீந்தா் சிங், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகி யோருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:  ஜனநாயகத்தையும், மதச்சார்பின்மையையும் விரும்பும் அனைத்து இந்தியர்களின் நல்லி ணக்கம் என்பது இந்த காலத்தின் தேவை. அனைத்து கருத்து வேறுபாடுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு அனைத்து தரப்பு மக்களும் ஒன்று கூடி ஜனநாயக விழுமியங்களை பாதுகாக்க வேண்டும். வரலாற்று ரீதியாக பல சவால்களை கடந்துள்ள வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நம் நாட்டின் தனித்துவமான மதிப்பாகும். தற்போதைய நெருக்கடி தலைகீழாக மாறும் என்றும் சாதகமான சூழல் மேலும் வலுப் பெறும் என்று கடிதத்தில் உறுதிபட தெரிவித்துள் ளார். மேலும், தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) குறித்தே பெரும் கவலை ஏற்பட்டுள்ளது. தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) தயாரிக்கும் பணி தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு இட்டுச் செல்லும் என்பதும் கவலையளிப்பதாகும். இதை கருத்தில் கொண்டு தேசிய மக்கள் தொகை பதி வேட்டு (என்பிஆர்) பணி கேரளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும் அந்த கடிதத்தில் தெரி விக்கப்பட்டுள்ளது.


 

;