புதுதில்லி, ஜுன் 16- 17ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜுன் 17 திங்களன்று துவங்குகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், தில்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், நாட்டின் அத்தியா வசியப் பிரச்சனைகள் பற்றி பேசுவதற்கு பதிலாக, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ பற்றி பிரதமர் மோடி பேசினார். அனைத்துக் கட்சி கூட்டத்தில், பாஜக, காங்கிரஸ், அதிமுக, திமுக, திரிணா முல் காங்கிரஸ், சமாஜ்வாதி, இடதுசாரி கள் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், பாஜக மாநிலங்கள வைத் தலைவர் தவார் சந்த் கெலாட் ஆகியோர் பங்கேற்றனர். திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வும், அதிமுக சார்பில், மக்களவை எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் குமார், மாநிலங் களவை எம்.பி நவநீதகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா ஆகியோரும், சமாஜ்வாதி கட்சியின் ராம் கோபால் யாதவ், திரிணமுல் எம்.பி தெரிக் ஓ பிரை யன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், நாடாளுமன்ற கூட்டத் தொடரை சமூக மாக நடத்த ஒத்துழைக்குமாறு அனைத்துக் கட்சிகளிடமும், ஆளும் பாஜக சார்பில் கோரிக்கை விடுக்கப் பட்டது. கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வழிவகுக்கும், “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்ற பரிந்துரை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி தலைவர்களும் முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதற்காக தமது தலைமையில் வருகிற 19ஆம் தேதி, நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் அனைவரது பங்கேற்பையும் தாம் எதிர்பார்ப்பதாகவும், பிரதமர் மோடி கூறினார்.
மேலும், 2022ல் கொண்டாடப்பட உள்ள சுதந்திர இந்தியாவின் 75ஆம் ஆண்டு தினம், மற்றும் இந்தாண்டு கொண்டாடப்பட உள்ள மகாத்மா காந்தி யின் 150ஆம் ஆண்டு பிறந்ததினம் குறித்து விவாதிக்கவும் அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் பிரதமர் அழைப்பு விடுத்தார். நாடாளுமன்றத்திற்கு புதியவர்கள் வரவின் மூலம் புதிய சிந்தனை பிறப் பெடுக்கும் என்றும் மோடி தெரிவித்தார். முன்னதாக, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, நாட்டில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் சந்தித்துள்ள நெருக்கடிகள், நாடு முழுவதும் காணப்படும் வறட்சி உள்ளிட்ட மக்களின் முக்கிய பிரச்சனை கள் குறித்து, நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் விவாதிக்க வேண்டும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங் கேற்ற எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இக்கூட்டத்திற்கு பிறகு செய்தி யாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற அலுவல் அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் பிரதிநிதிகளாக மக்களின் தேவை களை நிறைவேற்றுகிறார்களா இல்லையா என்பதை அனைத்துக் கட்சித் தலைவர்களும் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமென்று பிரத மர் மோடி வலியுறுத்தினார். மேலும் 16 ஆம் மக்களவையின் கடைசி இரண்டு ஆண்டுகள் எப்படி வீணாகியது என்பது பற்றியும் மோடி விளக்கினார்” என்று தெரிவித்தார். கூட்டம் முடிந்தபின் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “தேர்தல் முடிவுகளுக்கு பின் முதல்முறையாகவும், மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பாகவும் இன்று ஆக்கப்பூர்வமான அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அனைத்து தலைவர்களும் வழங்கிய பரிந்துரை களுக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் நாடாளு மன்றத்தை சுமூகமாக இயக்க அனை வரும் ஒப்புக்கொண்டோம்” என்று கூறியுள்ளார்.
இன்று பதவிப் பிரமாணம்
இந்நிலையில், திங்களன்று தொடங்கும் 17ஆவது மக்களவையின் இடைக்கால சபாநாயகராக நியமிக்கப் பட்டுள்ள பா.ஜ.க. எம்.பி. வீரேந்திர குமார், புதிய எம்.பி.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இரண்டு நாட்கள் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்ற பின், 19ஆம் தேதி சபாநா யகர் தேர்வு நடைபெறும். 20ஆம் தேதி நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்துகிறார்.