tamilnadu

img

வேளாண் நிலம் : புதிய சாகுபடி முறையால் அதிக லாபம் பெறும் மராட்டிய மாநில விவசாயிகள்

ஒரு வருடத்திற்குள் நெல் உற்பத்தி 1328 கிலோ ஒரு ஹெக்டேர் என்ற அளவில் இருந்து 1800 கிலோ ஒரு ஹெக்டேர் என்ற அளவிற்கு உயர்ந்தது. மேலும் இப்புதிய நெல் ரகத்தை சாகுபடி செய்யும் விவசாயிகள் சுமார் 140 சதவீதம் வரை வருமானத்தில் உயர்வு கண்டதாக வேளாண் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அண்மைக் காலமாக மராட்டிய மாநிலத்தில் உள்ள புனே மாவட்டத்தில் உள்ள 11 கிராமத்தைச் சேர்ந்த 800 விவசாயிகள் வல்லுநர் ஆலோசனை பெற்ற அதிக உற்பத்தி மற்றும் வருமானம் பெற்று வருகின்றனர். கடந்த பல வருடங்களாக தொடர்ந்து நெல் மட்டுமே சாகுபடி செய்து வந்த விவசாயிகள் அதிக உற்பத்தி மற்றும் லாபம் அடைய செய்ய கடந்த 2017 ஆண்டு முதல் “cybage Asha” என்ற புனேவை சேர்ந்த தொண்டு நிறுவனம் மற்றும் BA17 வளங்குன்றா வாழ்வுரிமைகள் மற்றும் வளர்ச்சி நிறுவனம் இணைந்து மண் பரிசோதனை மற்றும் விவசாயிகளின் சமூக - பொருளாதார பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அவர்களின் பிரச்சனைகளுக்கு தேவைப்படும் வாழ்வுரிமைகள் வடிவமைக்கப்பட்டது. இந்த ஆய்வில் பெரும்பாலான விவசாயிகள் மிகவும் குறைந்த அளவு இடம், குறைந்த கல்வி தகுதி மற்றும் அதிகப் படியான செயற்கை உர பயன்பாட்டின் விளைவாக குறைந்த மண் வளம் கொண்ட நிலத்தை கொண்டுள்ளதாக தெரிவித்தது. விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை (Intergrated water management) பற்றிய விழிப்புணர்வு, மண்ணின் வளத்தை பாதுகாக்கும் முறைகள், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் பொருளாதார பாதிப்புக்குள் பூச்சுகளை கட்டுப்படுத்தும் முறைகள் போன்றவை தெரியவில்லை. விவசாயிகளுக்கு நடத்தப்பட்ட பல பயிற்சி கூட்டங்கள் வாயிலாக எவ்வாறு உற்பத்தியை பெருக்கி, வருமானத்தை உயர்த்துவது பற்றி விளக்கி கூறப்பட்டது.

மேலும் இப்பகுதி விவசாயிகள் அதிகளவு பூச்சி தாக்குதலுக்கு உள்ளாகும் பாரம்பரிய “இண்டர் யானி” என்ற ரகத்தை தொடர்ந்து சாகுபடி செய்து வந்தனர். இதற்கு நல்ல மாற்றாக ‘புலே சம்ருத்தி’ என்ற உயர் விளைச்சல் நெல் ரகம் அறிமுகம் செய்யப்பட்டு, சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் வாயிலாக விவசாயிகள் பூச்சி மற்றும் பருவ மாற்று பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதுடன் விவசாயிகளுக்கு 25-30 சதவீதம் உற்பத்தி பெருக்கம் ஏற்பட்டது. மேலும் நெல் சாகுபடியில் நாற்றுகளுக்கு இடையே உரிய இடைவெளி போன்றவை பின்பற்றிய காரணத்தாலும், உரிய முறையில் யூரியா (தழை சத்து) சிறு விவசாயிகளின் வயல்களில் பயன்படுத்தப்பட்டதால் நெல் பயிரை தாக்கும் நோய்கள் மற்றும் மண் வள முறைகளை மேம்படுத்த முடிந்தது. மேலும் விவசாயிகள் பல மாவட்டங்களுக்கு வேளாண் சுற்றுலாவிற்கு அழைத்து செல்லப்பட்டு அவர்கள் நடைமுறையில் இப்புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதன் வாயிலாக கிடைக்கும் பயன்கள் பற்றி நேரடியாக தெரிந்து கொண்டனர். இதன் வாயிலாக ஒரு வருடத்திற்குள் நெல் உற்பத்தி 1328 கிலோ ஒரு ஹெக்டேர் என்ற அளவில் இருந்து 1800 கிலோ ஒரு ஹெக்டேர் என்ற அளவிற்கு உயர்ந்தது. மேலும் இப்புதிய நெல் ரகத்தை சாகுபடி செய்யும் விவசாயிகள் சுமார் 140 சதவீதம் வரை வருமானத்தில் உயர்வு கண்டதாக வேளாண் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் காய்கறிகளை சாகுபடி செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை 15 என்ற அளவில் இருந்து உயர்ந்து 350 எண்ணிக்கையிலான விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொண்டு கூடுதலாக ரூ.35,000 வரை அதிக வருமானம் பெற்றனர். இதற்கு முன்பாக இந்த கிராமங்களில் தோட்டக் கலை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டதே கிடையாது.

தற்போது வல்லுநர் குழுவின் ஆலோசனை வாயிலாக ஒரே பயிர் முறை தடுக்கப்பட்டு பல பயிர் சாகுபடி செய்யும் நடைமுறை கிராமங்களில் பெருகி வருகிறது. இவ்வாறு வெற்றிகரமாக வேளாண் தலையீடுகள் வாயிலாக சந்தை தொடர்புகள் உருவாக்கப்பட்டு பகிர்வு முறைகள் வாயிலாக செலவுகளும் விவசாயிகளுக்கு குறைக்கப்படுகிறது. இவ்வாறு ஆக்கப்பூர்வமான கூட்டு முறைகள் வாயிலாக பல புதிய தொழில்நுட்பங்கள் விவசாயிகளிடம் கொண்டு செல்லப்பட்டு வளங்குன்றா வேளாண் முறைகளுக்கு கிராமங்களில் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள், விதைகள், இடு பொருட்கள் பயன்பாட்டு மற்றும் நீர் பாசன முறைகள் வாயிலாக ஒரு வளமான முன் உதாரணம் நடைமுறையில் உருவாக்கப்பட்டுள்ளது.

===பேரா. தி.ராஜ்பிரவீன்===

;