tamilnadu

img

முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது

கூடலூர்

முல்லைப் பெரியாறு அணையை 136 அடியில் இருந்து 142 அடியாகவும்,பேபி அணையை பலப்படுத்தி 152 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.


உச்சநீதிமனற தீர்ப்பின் படி அணையினை கண்காணித்து பராமரிக்க மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமை பொறியாளர் நாதன் தலைமையில் மூவர் குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவில் தமிழகத்தின் சார்பில் ஒரு பிரதிநிதியும், கேரளா சார்பில் ஒரு பிரதிநிதியும் குழுவுக்கு உதவ 5 பேர் கொண்ட துணைக்குழு நியமிக்கப்பட்டது.இந்த துணைக்குழு அணையினை அவ்வப்போது பார்வையிட்டு பாதுகாப்பு,பலம் தொடர்பான அறிக்கையை மூவர் குழுவிற்கு சமர்பித்து வருகின்றது.


சமீபத்தில் முல்லைப் பெரியாறு அணை மீண்டும் மூவர் குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில், அணை தற்போதைய நீர்மட்டமான 112.80 அடிக்கு ஏற்றாற்போல அணை பலமாக உள்ளதாகவும்,13 மதகுகளின் இயக்கம் சீராக இருப்பதாக மூவர் குழு ஆயவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.மீண்டும் மே 2-வது வாரத்தில் மூவர் குழு ஆய்வு செய்யும் என எதிர்ப்பார்க்கப்டுகிறது. 


முல்லைப் பெரியாறு அணைக்கு செல்லும் வல்லக்கடவு சப்பாத்து பாலத்தை சீரமைக்குமாறு நாதன் குழுவில் தமிழக பிரதிநிதிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

;