tamilnadu

img

மத்தியப்பிரதேசம்- சலுகைகளும், தேர்தலும்

கோவிட் 19 தொற்று பரவலைத் தடுக்க மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தடுக்க  வேண்டிய மாநில பாஜக அரசே கோவிட் நெருக்கடிக்கு இடையில்  மக்களை பெருமளவில் ஒன்றுகூட வைக்கிறது. நடைபெற உள்ள சட்டமன்ற இடைத் தேர்தலை மனதில் வைத்து மக்களுக்கு தீவிரமாக சலுகைகளை வழங்கிக் கொண்டிருக்கிறது.கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.ஆனால் பாஜக அரசு மக்களுக்கு சலுகைகளை வழங்குவதில் தீவிரமாக உள்ளது.ஜுன் 25 வரை மாநிலத்தில் தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12488 ஆகும். 534 பேர் உயிரிழந்துள்ளனர்.

சௌகான் சிங் அரசு மின்கட்டணம் ரூ.100 முதல் ரூ.400 வரை வந்துள்ள மின்னிணைப்பு களுக்கு ரூ.100 செலுத்தினால் போதும் என்று அறிவித்துள்ளது. ரூ.400 அதற்கு மேலும் உள்ள வீடு மின்னிணைப்பு பயனீட்டாளர்களில் அதில் பாதித் தொகையை செலுத்தி னால் போதுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.நடைபெற உள்ள 24 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலின் மீது கண் வைத்தே அரசு இத்தகைய சலுகைகளை அறிவித்துக்கொண்டிருக்கிறது.கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நோயாளியையும் பாதுகாப்போம் என்கிறார் முதல்வர். ஆனால் புதிய உறுப்பினர் சேர்க்கும்இயக்கத்தை பாஜக நடத்திக் கொண்டிருக்கிறது. செய்தித்தாள்களில் பாஜக தலைவர்கள் சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாடுகளை மீறி கலந்து கொண்ட கூட்ட படங்களை சாதாரண மாக பார்க்க முடிகிறது.

கேலிக் கூத்தாக்கப்பட்ட ஊரடங்கு
பாஜகவின் தீவிரமான அரசியல் செயல்பாடுகளால் ஊரடங்கு உத்தரவு கேலிக் கூத்தாக்கப் பட்டுள்ளது.முதல்வர் சௌகானும் அவரது அமைச்சர்களும்   உரிய காலத்தில் போதுமான நடவடிக்கைகளை மேற்கொண்டதால்தான் மத்தியப் பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளதாக கூறிக் கொண்டிருக்கின்றனர்.வல்லுநர்களோ, மாநில அரசு கொரோனா தரவுகளை மறைத்து   தனக்கு வேண்டியதை மட்டுமே எடுத்துக் கொண்டு பொய் சித்திரம் தீட்டுவதை சுட்டிக்காட்டுகின்றனர்; விரிந்து பரந்த மாநிலத்தில் 52 மாவட்டங்களிலும் மின்னல் வேகத்தில் தொற்று நோய் பரவிவிட்டதையும், கொரோனா பரிசோதனைகள் சீரான  முறையில் நடத்தப்படாததையும் குறிப்பிடுகின்றனர். மே 1இல் 2461,மே 16இல் 5648, மே 27 இல் 3595 என பரிசோதனைகளின் எண்ணிக்கை ஏற்ற இறக்கங்களுடன் உள்ளன. 

மாநில காங்கிரஸ் கட்சியின் செய்தித்  தொடர்பாளர் அப்துல் ஹபீஸ் கான், வைரஸ் தொற்றைப் பரப்புவதில் பாஜக தலைவர்கள் முக்கியத்துவமான பங்கு வகிக்கின்றனர்.பாஜக தலைவர்களின் ஒரே குறிக்கோள் எப்படியாவது சட்டமன்ற இடைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே. பாஜக மாநிலம்முழுவதும் நடத்தி வரும் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம்களில் முரட்டுத்தனமாக மக்களை மாநிலத்தின் தொலைதூர மாவட்டங்களில் இருந்து ஹாட் ஸ்பாட்  இந்தூர், ஜெய்ப்பூர் மாவட்டங்களுக்கு வரவழைக்கின்றனர். 

இதனால் கொரோனா சிவப்பு மாவட்டங்களில் இருந்து தொலைதூர மாவட்டங்கள் வரை வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது என்கிறார். மே 21 இல் 186 கிராமங்கள் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தன. ஆனால், ஜுன் 15இல் 462 கிராமங்கள் வரை தொற்று நோய் பரவி விட்டது.நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்தேர்தலில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட  இரண்டு சட்ட மன்ற உறுப்பினர்கள் சட்டமன்றம் வந்து வாக்களித்தனர். ஒருவர் பாஜக. மற்றவர் காங்கிரஸ். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் பாதுகாப்புக் கவச உடையணிந்து வந்து வாக்களித்தார்.கல்லூரிகளில் இளங்கலை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு  மற்றும் முதுகலைமுதலாம் ஆண்டு பயிலும் 17.77 லட்சம் மாண வர்களுக்கு இந்தக் கல்வியாண்டிற்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்வுகளின்றியே அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்ற தாகக்கருதப் படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது, இது மேனிலைப் பள்ளி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி நிறுவன மாணவர்களுக்கும் பொருந்தும்.முதுகலை இரண்டாம் ஆண்டு நான்காவது செமஸ்டரில் உள்ள மாணவர்கள் முந்தைய செமஸ்டர்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி அறிவிக்கப்படும்.

ஃப்ரண்ட்லைன் (ஜூலை 17,2020 )இதழில் 
ஆனந்த பக்தோ கட்டுரையிலிருந்து
தொகுப்பு: ம.கதிரேசன்

;