tamilnadu

img

இ.எம்.ஐ. சலுகையால் வராக்கடன் ஏற்படாது...

புதுதில்லி:
வங்கிகளில் கடன் பெற்றவர்கள், கொரோனா பொதுமுடக்க பாதிப்பு காரணமாக, மார்ச் முதல் மே வரையிலானதவணையை செலுத்த வேண்டியதில்லை என்று மத்திய நிதித்துறை சலுகைவழங்கியது. தற்போது அதனை ஆகஸ்ட் 31 வரை நீட்டித்தும் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, மத்திய அரசு அறிவித்த இஎம்ஐ சலுகையால் வங்கிகளுக்கு கடுமையான இழப்புகள் ஏற் படும்; வராக் கடன்கள் அதிகரிக்கும் எனசிலரால் பயமுறுத்தல்கள் செய்யப்பட்டன.இந்நிலையில், இஎம்ஐ சலுகையால் வங்கிகளுக்கு மிகப் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை எனவும், கடனைக் காலம் தாழ்த்திக் கொடுப்பதற்கான சட்ட உரிமை (Moratorium) பிரிவில் 30 சதவிகிதக் கடன்கள் மட்டுமே இருப்பதாகவும் வங்கிகள் தரப்பில் தற்போது தெரிவிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ),தன்னிடம் கடன்பெற்ற வங்கி வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் நிரந்தரஊதியம் பெறுபவர்களாக- அதாவது அரசு ஊழியர்களாகவோ, அதிக சம்பளம் பெறும் நபர்களாகவோதான் இருக்கின்றனர்; அவர்களில் 82 சதவிகிதம் பேர், இஎம்ஐ சலுகைக் காலத்திலும் கூட தங்களின் தவணைத் தொகையை செலுத்தி விட்டனர்; மேலும் 90 சதவிகிதத்தினர் ஒன்று அல்லது இரண்டு மாதத்தவணைகளைச் செலுத்தி விட்டனர் என்று கூறியுள்ளது.

இதனால், அரசு அறிவித்த இஎம்ஐசலுகையால், வராக் கடன் பிரச்சனைகள் வராது என எஸ்பிஐ தெரிவித்துள் ளது. மற்ற வங்கிகளும் இதேபோன்ற கருத்தையே தெரிவித்துள்ளன.இஎம்ஐ செலுத்தப் பணம் இருந்தும்அதைச் செலுத்தாமல் இருக்கும் வாடிக்கையாளர்கள்தான் அதிகமாக இஎம்ஐமொரட்டோரியம் வசதிக்குள் வருவதால், செப்டம்பர் மாதத்தில் இஎம்ஐ செலுத்தும் காலம் தொடங்கியவுடன் நிதி நெருக்கடி எதுவும் வாடிக்கையாளர்களுக்கு இருக்காது என்று ஸ்டேட்பாங்க் ஆப் இந்தியா வங்கியின் தலைவரான ரஜ்னிஷ் குமார் கூறியுள்ளார்.