சென்னை:
முந்தைய மாத மின் கட்டணங்களை பேரிடர் நிவாரணமாக அறிவித்து, மேலும் ஆறு மாதங்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் சலுகைகள் வழங்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின் நுகர்வோர் முந்தைய மாதங்களில் செலுத்திய கட்டணத்தையே மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கும் மின் கட்டணமாக செலுத்தலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்பு சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.மீண்டும் மின் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியுள்ள நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, நான்கு மாத கால மின் நுகர்வை இரண்டு மாதமாக பிரித்து, யூனிட்டை கழித்து மின்கட்டணம் வசூலிக்காமல், வெவ்வேறான வீதப்பட்டியல் அடிப்படையில் புதிய மின் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.பொதுமக்கள் எந்த வகையிலும் பாதிக்காத வகையில் உரிய முறையில், யூனிட்டுகளை கழித்து மின் கட்டணம் வசூல் செய்வதை அரசு உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது.