tamilnadu

img

மக்கள் எழுச்சியின் அடுத்த கட்டம் ஜன.8 வேலைநிறுத்தம்

மோடி அரசுக்கு எதிராக தேசமே அணிதிரளட்டும்: சீத்தாராம் யெச்சூரி அழைப்பு

திருவனந்தபுரம், டிச.15- மக்களை மதத்தின் பெயரால் துண்டாடும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த முடியாது என கேரள முதல்வர் பினராயிவிஜயன் பிரகடனம் செய்தது மற்ற மாநிலங்களை யும் இதே முறையில் சிந்திக்கத் தூண்டிய தாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார். குடியுரிமை திருத்த மசோதா உள்பட மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்கு தல்களுக்கு எதிராக ஒட்டுமொத்த இந்திய மக்களும் எழுந்து நின்று எதிர்த்து நிற்கும் மாபெரும் எழுச்சியின் அடுத்த கட்டமாக ஜனவரி 8 பொது வேலை நிறுத்தம் அமையும் என்றும் அவர் கூறினார். 

‘குடியரசு தலைவர் கையொப்ப மிட்டாலும் இல்லை என்றாலும் ஜனவரி ஒன்று முதல் நாம் நிலத்தின் மீதான உரிமையை நிலைநாட்டுவோம்’ என்று கேரளத்தில் தோழர் ஏ.கே.கோபாலன் பிரகடனம் செய்த அரவுக்காடு நில உரிமை மாநாட்டின் 50 ஆண்டு விழா ஞாயிறன்று நடைபெற்றது. விழாவை துவக்கிவைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் பேசியதாவது: குடியுரிமை திருத்த சட்டத்துக்கான எதிர்ப்பில் கேரளம் முன்மாதிரியாக விளங்கியது. அதன்பிறகுதான் இந்த சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என அறிவிக்க மற்ற சில மாநிலங்கள் முன்வந்தன. நீங்கள் இந்துவா, கிறித்தவரா, முஸ்லீமா, தலித்தா, பிராமணனா என்ற கேள்வி இல்லாமல் வாழ முடியும் என்கிற ஒரே மாநிலம் கேரளம். அதுதான் கேரளத்தின் மகத்தான மதச்சார்பற்ற பாரம்பரியம்.

நாட்டில் மதச்சார்பற்ற பாரம் பரியத்தையும் அரசமைப்பு சாசனத்தை யும் தகர்க்க மத்திய அரசு முயற்சிக்கும் போது, அவற்றை பாதுகாப்பதற்கான போராட்டத்துக்கு தலைமை வகிப்ப தில் கேரள மக்களுக்கு பெரும் பங்குள் ளது. யார் தேசவிரோதி என்று மத்திய அரசால், குறிப்பாக அமித் ஷாவால் தீர்மா னிக்க முடியும் என்கிற வகையில் அரசமைப்பு சாசனம் வளைக்கப்படு கிறது. தேசவிரோதி என முடிவு செய்து எவரையும் விசாரணை இல்லாமல் தண்டிப்பதை ஒரு மத்திய சட்டத்தின் பெயரில் சட்டப்பூர்வமாக்க முயற்சிக் கிறார்கள்.

ஜனவரி - 8 வேலைநிறுத்தம்

தேசத்தின் பொருளாதார நிலை அவசர சிகிச்சைப் பிரிவில் (ஐசியு) உள்ளதாக பிரதமரின் பொருளாதார ஆலோசகருமான அரவிந்த் சுப்ரமணி யம் கூறினார். இந்த நிலை தொடர்ந்தால் நிலைமை விபரீதமாகும் எனவும் அவர் கூறினார். மத்திய அரசின் கொள்கை களுக்கு எதிராக பரவலான போராட்டம் நாடு முழுவதும் வலுப்பெற்று வரு கிறது. தொழிலாளர்களும் விவசாயி களும் விவசாயத் தொழிலாளர்களும் மாணவர்களும் இளைஞர்களும் அறிவு ஜீவிகளும் போராட்டத்தில் அணிவகுப் பது வலுப்பட்டு வருகிறது. இதன் அடுத்த கட்டமே ஜனவரி எட்டாம் தேதி நடக்க விருக்கும் வேலைநிறுத்தம். இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.