tamilnadu

தேர்தல் விதிமீறல்

பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர் விதிகளை மீறினால் தேர்தல்ஆணையம் நடவடிக்கை எடுப்பதில்லை என்று காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுஷ்மிதா தேவ் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தக்கல் செய்துள்ளார். அதில், “பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தேர்தல் விதிகளை மீறினால்தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.எனவே, உச்சநீதிமன்றம் தலையிட்டு தேர்தல் ஆணையத்திற்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கவேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் முன்னிலையில் தாக்கலானது. இந்த மனு மீதுசெவ்வாயன்று விசாரணை நடைபெறும் என்று அவர் அறிவித்தார்.இந்த மனு விசாரணையின் போது, வழக்கறிஞர்கள் பிரதமரைக் குறிப்பிடும்போது பெயரைக்குறிப்பிடுங்கள். பிரதமர் என்று மட்டும் குறிப்பிட்டு கண்ணாமூச்சி விளையாட வேண்டாம் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கேட்டுக்கொண்டார்.

;