tamilnadu

img

ஆம்பன் புயல் எதிரொலி... சென்னையில் சுட்டெரிக்கும் வெயில்

சென்னை:
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆம்பன் புயல் மேற்கு வங்க மாநிலத்தில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க் கப்படும் நிலையில்,  சென்னையில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

ஆம்பன் புயல் தற்போது வடக்கு - வடக்கிழக்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கக் கடற்கரையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.இந்த புயலினால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும், சென்னையில் கடல் புதனன்று ( மே 20) காலை முதலே சீற்றத்துடன் காணப் பட்டது. கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் வெப்பம் 105 டிகிரியை கடந்து கொளுத்தி வருகிறது. புயல் தாக்கம் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லை.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

;