tamilnadu

img

டாக்டர் பட்டம் : கமல்ஹாசனுக்கு நடிகர் சங்கம் வாழ்த்து

புவனேஸ்வர்: 
இந்தியாவின் கிழக்கு பகுதி மாநிலமான ஒடிசாவின் செஞ்சுரியன் தொழில்நுட்ப மேலாண்மை பல்கலைக்கழகத்தின் சார்பில், திரைப்படத்துறை சேவையை பாராட்டி நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவருமான கமல்ஹாசனுக்கு  கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், டாக்டர் பட்டம் வென்ற கமல்ஹாசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டிற்கும் தமிழ் கலைஞர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்த செஞ்சுரியன் பல்கலைக்கழகத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றியினை தெரிவித்து கொள்கிறது. 

;