tamilnadu

img

கொரோனா வைரஸ் பாதிப்பு : பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் பலி 

மும்பை 
பாலிவுட் திரைப்பட உலகின் பழம்பெரும் தயாரிப்பாளர் அனில் சூரி (77) மகாராஷ்டிரா  மாநிலத்தின் தலைநகரான மும்பையில் வசித்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் கடுமையான மூச்சு திணறலுடன் அவருக்கு காய்ச்சல் ஏற்பட முதலில் பிரபல தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு படுக்கை தொடர்பாக பிரச்சனை உருவாக, அதே பகுதியில் மற்றொரு பல்நோக்கு வசதி கொண்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத்திணறல் அதிகமாக இருந்ததால் கொரோனா சோதனை நடத்தப்பட்டது. இறுதியில் அனில் சூரிக்கு கொரோனா இருப்பது தெரியவர தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இந்நிலையில் நேற்று  அனில் சூரி உயிரிழந்தார்.  அவரது உடல் வெர்சோவாவில் உள்ள தகன மையத்தில் நெருங்கிய உறவினர்கள் 4 பேர்கள் பாதுகாப்பு கவசத்துடன் கலந்துகொள்ள பிறகு தகனம் செய்யப்பட்டது. 

;