சென்னை
தென்னிந்திய திரையுலகில் பிரபல தயாரிப்பாளராக உள்ள கே.இ. ஞானவேல்ராஜா ஹிட் கதைகளை தேர்வு செய்து படத்தை தயாரிப்பதில் தனி பக்குவம் உடையவர். இதனால் அவருடைய தயாரிப்பு படங்கள் பெரும்பாலும் மெஹா ஹிட் வரிசையில் தான் உள்ளன.
இத்தகைய சிறப்புடைய ஞானவேல்ராஜா தனியார் நிறுவன நிலமோசடி வழக்கில் சிக்கி கைது செய்யப்படும் சூழ்நிலையில் உள்ளார். கைதை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஜாமீன் மனு கோரிய ஞானவேல்ராஜாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக இருப்பதாக அவரது வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் வாதாட, உயர்நீதிமன்றோமோ அவரை கைது செய்ய இடைக்கால தடை விதித்துள்ளது. கொரோனா பாதிப்பு மூலம் கைது நடவடிக்கையில் இருந்து ஞானவேல்ராஜ் தப்பித்தார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கே.இ. ஞானவேல்ராஜா பிரபல நடிகர் சூர்யாவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.