நீர்த்தேக்கத் தொட்டி ஊழியர் சங்க மாநாடு
குடவாசல், மே 16-குடவாசல் ஒன்றியத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சங்கம் சார்பாக(சிஐடியு) வருகிற 18ம் தேதி காலை 10 மணிக்கு குடவாசலில்உள்ள எம்எஸ்கே திருமண மண்டபத்தில் குடவாசல் ஒன்றியசார்பாக கோரிக்கை மாநாடு நடைபெறுகிறது.மாவட்ட கௌரவத் தலைவர் டி.கலியமூர்த்தி தலைமைவகிக்கிறார். ஒன்றிய துணைத் தலைவர்கள் ஜி.பக்கிரிசாமி,கே.காத்தலிங்கம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.ஒன்றிய செயலாளர் கே.ஆறுமுகம் வரவேற்புரை ஆற்றுகிறார். சம்மேளன மாநில தலைவர் நா.பாலசுப்பிரமணியன்,சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.முனியாண்டி, சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர் என மாநாடு வரவேற்புக்குழு சார்பாக தெரிவித்தனர்.
பாதாளச் சாக்கடை திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை
தஞ்சாவூர், மே 16-பட்டுக்கோட்டை சீனிவாசன் நகர் குடியிருப்போர் நலச்சங்க கூட்டம் தலைவர் சி.ரெங்கசாமி தலைமையில் நடைபெற்றது. கே.காளிமுத்து வரவேற்றார். கூட்டத்தில், பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை தொடங்கி செயல்படுத்த வேண்டும். ஆர்விநகர் நியாய விலை கடைக்கு புதிய கட்டிடம் கட்டி திறக்கப் படாமல் உள்ளது. உடனடியாக புதிய கட்டிடத்தை திறக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக எஸ்பாலசிங்கம் நன்றி கூறினார்.
விளையாட்டு வீரர்களுக்கு சான்றிதழ்
தஞ்சாவூர், மே 16-தஞ்சாவூர் மாவட்ட அளவிலான இருப்பிட பயிற்சி முகாம்கடந்த மே 1 ஆம் தேதி தொடங்கி மே 15 வரை நடைபெற்றது.ஓட்டப்பந்தயம், உயரம், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில் 86 மாணவர்கள், 84 மாணவிகள் உள்பட 170 பேர்இருப்பிட, உணவு வசதியோடு பயிற்சி பெற்றனர். அவர் களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டக் கல்வி அலுவலர் மஞ்சுளா, மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் விளையாட்டு சீருடைகளை வழங்கிப் பேசினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் பாபுவரவேற்றார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தேன்மதி, மாவட்ட கல்வி ஆய்வாளர் சிவாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.