tamilnadu

img

குடிமனைப் பட்டா கேட்டு காத்திருப்புப் போராட்டம்

கும்பகோணம், நவ.9-  தஞ்சை மாவட்டம் கும்பகோ ணம் அருகே உள்ள பறட்டை கிராமத்தில் கும்பகோணம்- நீலத்த நல்லூர் சாலையோரம் குடியிருந்த குடும்பங்களை அப்புறப்படுத்தி கீழ பறட்டை  பகுதியில் குடிமனை வழங்கி பத்து வருடமாக அரசு புறம்போக்கு இடத்தில் குடிஇருந்து வரும் குடும்பங்களுக்கு குடிமனை பட்டா மற்றும் அடிப்படை வசதி கேட்டு கும்பகோணம் வட்டாட்சியரி டம் மனு கொடுத்து காத்திருப்புப் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்றது.  போராட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோக ரன், மாவட்ட குழு உறுப்பினர் சி.நாக ராஜன், ஒன்றிய செயலாளர் பி. ஜேசுதாஸ், ஒன்றிய குழு உறுப்பினர் நாகமுத்து உள்ளிட்ட பறட்டை கிராம மக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கும்பகோணம் வட்டாட்சியர், போராட் டம் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் பட்டா மற்றும் அடிப்படை வசதி வழங்கப் படும் என உறுதியளித்தார். இதைய டுத்து தற்காலிகமாக போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.