tamilnadu

தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் செய்திகள்

தஞ்சையில் குழந்தைகள் விளையாட்டு மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம் 
தஞ்சாவூர், ஜூலை 17- தஞ்சாவூர் மாவட்டத்தில், குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் தங்க வைக்க இயலாத பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான விளையாட்டு மற்றும் பொழுது போக்கு மையம் அமைத்து நடத்திடுவதற்காக தகுதியுடைய நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன.  மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்ச கத்தின் கீழான குழந்தைகள் பாதுகாப்புத் திட்டப்பணி களில் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட சூழ்நிலைகளில் உள்ள குழந்தைகளில் குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் தங்க வைக்க இயலாத குழந்தைகளுக்கான விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு மையத்தினை அமைத்திடு வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தஞ்சாவூர் மாவட்ட இணையதளத்தில் https://thanjavur.nic.in பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது, மேற்காணும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி விளை யாட்டு மற்றும் பொழுதுபோக்கு மையம் அமைத்து பராம ரித்திட தகுதியுடைய நிறுவனங்கள் தங்களுடைய விண்ணப்பங்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அர சினர் குழந்தைகள் இல்ல வளாகம், வ.உ.சி நகர், தஞ்சா வூர் - 613 007, தொலைபேசி எண் 04362 - 237014 மின்னஞ்சல் dcpstnir@gmail.com என்ற முகவரிக்கு 14.8.2019 அன்றுக்குள் அனுப்பி வைத்திடுமாறு மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

பெரிய குமளை குளத்தை தூர்வார கோரிக்கை 
தஞ்சாவூர், ஜூலை 17- தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் ஒன்றியம் கோபால சமுத்திரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை கே.பொடியப்பன் தலைமை யில் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றியச் செயலாளர் வை. சிதம்பரம் பேசினார். கிளைச் செயலாளர் வி.ராஜகோபால் மற்றும் கிளை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.  தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாட்டின் பேரணி பொதுக் கூட்டத்தில் திரளான உறுப்பினர்கள் பங்கேற்பது. பெரியகோட்டை கோபாலசமுத்திரத்தில், 20 ஆண்டு களுக்கு மேலாகியும், தூர்வாரப்படாமல் உள்ள பெரிய குமளை குளத்தை தூர்வார வேண்டும். சிராங்குடியிலி ருந்து கோபாலசமுத்திரம் செல்லும் வழியில், பழுத டைந்த நிலையில் உள்ள கிராம உட்பிரிவு சாலைகளை சீரமைத்திடவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

மணல் திருட்டு: டிராக்டர் பறிமுதல்
சீர்காழி, ஜூலை 17- நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடம் அருகே கீழவாடி கிராமம் பள்ளிகூடத் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் செவ்வாயன்று கொள்ளிடம் ஆற்றில் இவருக்குச் சொந்தமான புதிய டிராக்டரில் மணல் ஏற்றிக் கொண்டி ருந்தார். தகவலறிந்து கொள்ளிடம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தபோது, மணிகண்டன் அந்த இடத்திலி ருந்து தப்பி ஓடிவிட்டார். போலீசார் டிராக்டருடன் மணலை பறிமுதல் செய்து தப்பியோடிய ஓட்டுநரை தேடி வரு கின்றனர்.

;