tamilnadu

தஞ்சாவூர்,தூத்துக்குடி முக்கிய செய்திகள்

‘முதியவர்களைப் பராமரிக்காத நபர்களின் சொத்து பறிமுதல்’
தஞ்சாவூர், நவ.3- முதியோர் நலக்குழு மற்றும் ஒருங்கிணைந்த சேவை மையத்தின் பணிக் குழு கூட்டம் தஞ்சாவூரில் ஆட்சியர் ஆ.ஆண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் பாது காப்புச் சட்டம் 2007ன்படி, அவர்களுடைய சொத்துகளை பெற்றுக் கொண்ட வாரிசு மட்டும் அல்லாது பராமரித்து வரும் மற்றவர்களும் அவர்களை முறையாக பராம ரிக்கவில்லை என்றால், கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்து உரிய சொத்தினை மீண்டும் திரும்ப பெற்றுக் கொள்ள முடியும் என்ற சட்டத்தினையும் எடுத்து கூறப்பட் டது. மேலும் பராமரிப்பு இல்லங்களில் முதியோர்களை கொசு தாக்காத வண்ணம் கொசு வலை மற்றும் வியாதி கள் வராமல் இருக்க மருத்துவ வசதிகள் தொடர்ந்து வழங்கப்பட சுகாதார துறையினரும் பார்வையிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.  மத்திய அரசு பாதிக்கப்பட்ட பெண்களுக்கான பாது காப்பு கருதி ஒருங்கிணைந்த சேவை மையம் என்ற திட்டத்தினை நிர்பயா நிதி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் 18 வயதிற்கு மேல் உள்ள வர்களுக்கு இலவச தங்கும் இடம் 5 தினங்களுக்கு இல வச உணவு, மருத்துவ வசதி, இலவச உளவியல் ஆலோ சனை வசதி அளிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் 24 மணி நேரமும் 181 எண்ணில் அழைத்து தங்கள் பிரச்சினையை தெரி விக்கலாம். 5 நாட்களுக்கு பிறகு ஆலோசனை வழங்கப் பட்டு குடும்பத்தினருடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் அல்லது சுவதார் கிரஹாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு சொந்தமாக முன்னேறுவதற்கு தொழிற் பயிற்சி வழங்கப்படும். மாவட்ட சமூக நல அலுவலர் ராஜேஷ்வரி, மாவட்ட சட்ட பணிகள் செயலர் நீதிபதி சுதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்துமீனாட்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நினைவஞ்சலி கூட்டம் 
தஞ்சாவூர், நவ.3-தமிழ்நாடு திருக்கோவில் நிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் மறைந்த எஸ்.இராசப்பாவின் ஏழாம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் சனிக்கிழமை அன்று தஞ்சை மேலவீதி கோடீஸ்வரர் அறக் கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு முன்னாள் இணை ஆணையர் கோவிந்த ராம் தலைமை வகித்தார். உதவி ஆணையர் பழனியப்பன் முன்னிலை வகித்தார். முன்னாள் மாநில பொதுச்செய லாளர் தனபால், கண்காணிப்பாளர்கள் செல்வராஜ், முத்தையா, திருக்கருக்காவூர் செயல் அலுவலர் முரளி தரன், திருக்கோவில் பணியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நினைவஞ்சலி கூட்டத்திற்கான ஏற்பாடு களை அறநிலையத் துறை ஓய்வு பெற்றோர் சங்க மண்டல தலைவர் டி.கோவிந்தராஜூ மற்றும் மேலாளர் பரணி தரன் ஆகியோர் செய்திருந்தனர். விநாயக பேங்கர்ஸ் உரிமையாளர் பாலகுருநாதன் நன்றி கூறினார்.

கட்டணக் கொள்ளையை கண்டித்து துணைவேந்தரிடம் மனு
தூத்துக்குடி, நவ.3-சான்றிதழ் திருத்தம் செய்யும் பணிக்கு ரூ. 500 வசூலிக்க கூடாது, தேர்வு கட்டணம் தாமதமாக செலுத்தும் மாண வர்களுக்கு அபராதமாக ரூ. 2000 வசூலிக்க கூடாது, மறுமதிப்பீடு செய்வதற்கு ரூ. 800 வசூலிக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் பிச்சு மணி மற்றும் பதிவாளர் சந்தோஷ்பாபு ஆகியோரை மாவட்ட செயலாளர் ஜாய்சன் தலைமையில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது.