தஞ்சாவூர், ஜூன் 15- தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் முன்பு, 32 தற்காலிகப் பணியாளர்களை பணி நீக்கம் செய்த நிர்வாகத்தைக் கண்டித்தும், அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கரிகாலன் தலைமை வகித்தார். இதில் 25 பேர் கலந்து கொண்டு, கொரோ னா காலத்தில் அரசின் உத்தரவை அப்பட்டமாக மீறும் வகை யில் பணி நீக்கம் செய்த பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கண்டித்தும், மீண்டும் பணி வழங்க வேண்டும்” எனவும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.