tamilnadu

img

தஞ்சையில் பழங்கால நடராஜர் சிலை கண்டெடுப்பு

தஞ்சாவூர், செப்.18- தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே வள்ளிகொல்லைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் லலிதா (56). இவர் வீட்டில் கழிவறை கட்ட, செவ்வாயன்று மாலை, குழி தோண்டிய போது, ஐந்து அடி ஆழத்தில் பழங்கால நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து வட்டாட்சியர் அருள்பிரகாசத்திற்கு, கிராம நிர்வாக அலுவலர் மகரஜோதி தகவல் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த, வட்டாட்சியர் அருள்பிரகாசம், அதிராம்பட்டினம் காவல்துறை ஆய்வாளர் ஜெயமோகன் உள்ளிட்டோர் கண்டெடு க்கப்பட்ட சிலையை பார்வையிட்டனர். நடராஜர் சிலை 5 அடி உயரமும், 500 கிலோ எடையும் கொண்டது என தெரியவந்தது. அத்துடன், வேறு சிலைகள் எதுவும் உள்ளதா என ஜே.சி.பி. மூலம் அப்பகுதியை சுற்றியுள்ள இடங்களில் பள்ளம் தோண்டி ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகி ன்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இப்பகுதியில் அதிவீரராமபாண்டியன் கோட்டை இருந்துள்ளது. கடந்த ஆண்டு, பழஞ்சூர் கிராமத்தில் பத்துக்கும் மேற்பட்ட ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இப்பகுதியைச் சுற்றி அடுத்தடுத்து ஐம்பொன் சிலைகள் கிடைக்கப் பெறுவதால், இப்பகுதியை அகழாய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றனர்.