tamilnadu

img

மணல் கொள்ளை, தாமத தூர்வாரும் பணியால் கல்லணைக்கு மிக தாமதமாக வந்த சிறிதளவு காவிரி நீர்

தஞ்சாவூர்:
கர்நாடகத்திடம் இருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீரை கேட்டுப்பெற வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் கூறியதாவது:

“கடந்த எட்டு வருடங்களுக்கு பிறகுஇந்த ஆண்டு தான் ஜூன் 12 மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப் பட்டது. அதன் தொடர்ச்சியாக ஜூன் 16 அன்று காலை 11 மணிக்கு கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என்றுஅறிவிக்கப்பட்ட நிலையில், கல்லணைக்கு பகல் 12 மணி வரை தண்ணீர் வந்து சேரவில்லை. இரண்டு மணி நேர தாமதத்திற்கு பிறகு தான் தண்ணீர் சிறிதளவு வந்தடைந்தது. பிறகு 12.50-க்குதண்ணீர் திறக்கப்பட்டது. இது மக் களை, விவசாயிகளை ஏமாற்றமடைய வைத்தது. 

தண்ணீர் வரத்தில் ஏற்பட்டுள்ள தடைகவலைப்பட வைக்கிறது. தண்ணீர் வரதடைகளாக முக்கொம்பு உள்ளிட்டஇடங்களில் இன்னும் பணிகள் முழுமையாக நடைபெறாமல் இருப்பதும், மணல்மாஃபியாக்களால் மிக ஆழமாக ஆறுகள் சுரண்டப்பட்டுள்ளதால், பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு, தண்ணீர் வருவதற்குபெரும் தடைகளாக உருவெடுத்துள் ளன. இந்த தடைகள் விவசாயிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.கடைமடை வரை தண்ணீர் எப்படி வந்துசேரப் போகிறது என்பது கேள்விக் குறியே. எனவே ஆட்சியாளர்கள் மிகதுரிதமாக செயல்பட்டு பிரச்சனைகளை தீர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தூர்வாரும் பணிகள் மிக துரிதமாகவும், உடனடியாகவும் செய்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.டெல்டாவில் சுமார் ஐந்து லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. ஆட்சியாளர் கள் தகவல்படி டெல்டா முழுவதும் சுமார்மூன்றரை லட்சம் ஏக்கர் தயார் நிலையில் உள்ளது. தஞ்சை மாவட்டம் ஒன்னரை லட்சம் ஏக்கர் வரை குறுவைசாகுபடி நடைபெறும் என்ற சூழ்நிலைஉள்ளது. விதை உள்ளிட்ட இடுபொருட்கள், உரங்கள் தடையின்றி கிடைக்க வேண்டும். பயிர் கடன்களை நிபந்தனையின்றி அனைத்து தேசிய வங்கிகள், கிராம கூட்டுறவு வங்கிகள் அனைத்திலும் கிடைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும்,காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற் கான தண்ணீரை காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுப்படி 40 டி.எம்.சி அளவை உரிய முறையில் பெற்றிட வேண்டும் என்றார்.

;