tamilnadu

நெற்பயிர் அமைப்பு மேலாண்மை பயிற்சி

 தஞ்சாவூர், ஜூலை 20- தஞ்சை மாவட்டம் மதுக்கூர் வட்டாரம் கீழக்குறிச்சி கிழக்கு கிராமத்தில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சனிக் கிழமை விவசாயிகளுக்கான நெற்பயிர் அமைப்பு சார்ந்த மேலாண்மை பயிற்சி நடைபெற்றது. பயிற்சியில் துணை வேளாண் அலுவலர் கலைச்செல்வன் பேசினார். மேலும் நெல்சாகுபடி அறு வடைக்குப் பின் அதே வயலில் உயர் விளைச்சல் தரக் கூடிய புதிய உளுந்து விதைகளை கொண்டு சாகுபடி செய்து அதிக மகசூல் பெறலாம் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. பயிற்சி ஏற்பாடுகளை வேளாண் உதவி அலுவலர் ஜெரால்டு ஞானராஜ் செய்தார்.