தஞ்சாவூர், செப்.21- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பேராவூரணி மனவளக் கலை மன்றம் சார்பில், காயகல்ப(யோகா) பயிற்சி வகுப்பு நடந்தது. கல்லூரி முதல்வர் (பொ) முனைவர் நா.தனராஜன் தலைமை வகித்தார். மனவளக் கலை மன்ற கௌரவத் தலைவர் சோலைமலை, நிர்வாக அறங்காவலர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் என்.பழனிவேல் வரவேற்றார். திருச்சி பேராசிரியர் அமுதா ராமானுஜம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு காயகல்ப பயிற்சி வகுப்பை நடத்தி, புத்தகங்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் செயலாளர் இதயபானு உள்பட பலர் கலந்து கொண்டனர். யோகா பேராசிரியர் விஜய நிர்மலா நன்றி கூறினார்.