tamilnadu

img

பூம்புகார் நிறுவனத்தில் முதன்முறையாக புவிசார் குறியீடு பெற்ற கைவினைப் பொருட்கள் கண்காட்சி துவக்கம்.....

தஞ்சாவூர்:
தஞ்சாவூர் பூம்புகார் நிறுவனத்தில் புவிசார் குறியீடு பெற்ற கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை சனிக்கிழமை இரவு துவங்கியது.

கண்காட்சியை தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் பு.ஜானகிரவீந்திரன் துவக்கி வைத்தார். பூம்புகார் நிறுவனத்தின் மேலாளர் கு.அருண் அனைவரையும் வரவேற்று பேசுகையில், கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கும், அதனை சந்தைப் படுத்தும் விதமாக பூம்புகார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இந்தியா முழுவதும் தில்லி, கொல்கத்தா உள்பட 14 விற்பனை நிலையங்களை நடத்தி, பல்வேறு கண்காட்சிகளின் மூலம் விற்பனையை அதிகரித்துவருகிறது. இதில் முதன்முறையாக புவிசார் குறியீடு பெற்ற கைவினைப் பொருட்களை மட்டும் கொண்ட சிறப்பு கண்காட்சி துவக்கப்பட்டுள்ளது. 

தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை யகத்தில் பிப்.28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் சுவாமிமலை பஞ்சலோக சிலைகள், நாச்சியார்கோவில் குத்துவிளக்குகள், தஞ்சாவூர் கலை தட்டுகள், ஓவியங்கள், தலையாட்டி பொம்மைகள், நெட்டியிலான கைவினைப் பொருட்கள், தஞ்சாவூர் வீணைகள் இடம் பெற்றுள்ளன.இக்கண்காட்சியில் ரூ.150 முதல் ரூ.65 ஆயிரம் வரை மதிப்பிலான பொருட்கள் விற்பனைக்கு உள்ளது. ரூ.3.5 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள பஞ்சலோக சிலைகள், குத்துவிளக்குகளுக்கு 20 சதவீதமும், பிற கைவினைப் பொருட்களுக்கு 10 சதவீதமும் சிறப்பு தள்ளுபடி அளிக்கப்படு கிறது என்றார்.

;