திருவண்ணாமலை, மார்ச் 15- திருவண்ணாமலையில் நடை பெற்று வரும் அறியப்படாத விடுதலை போராட்ட வீரர்கள் பற்றிய கண்காட்சி வியாழனன்று(மார்ச் 16) நிறை வடைகிறது. தமிழ்நாடு -புதுச்சேரி மண்டல மக்கள் தொடர்பக அலுவலகத்தின் சார்பில், நடைபெற்ற இந்த கண்காட்சியை யொட்டி கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றது. இதில் வேலூர் மத்திய மக்கள் தொடர்பக அலுவலக கள விளம்பர அலுவலர் முரளி கலந்து கொண்டு பேசினார். சினம் தொண்டு நிறுவன இயக்குநர் இராம. பெருமாள், வாழ்த்துரை வழங்கினார். வேலூர் மத்திய மக்கள் தொடர்பக அலுவலக கள விளம்பர உதவி அலுவலர் ஜெய்கணேஷ் நன்றி கூறினார். கல்லூரி மாணவர்கள் திரளானோர் இந்த கண்காட்சியை பார்வையிட்டனர்.