tamilnadu

சிறு சோப் உற்பத்தியாளர்கள் சங்க தேசிய கருத்தரங்கம், கண்காட்சி

சென்னை, டிச. 25 6வது முறையாக தேசிய அளவிலான சோப் மற்றும், டிடர்ஜென்ட் குறித்து கருத்தரங்கம், தொழில் கண்காட்சி 28, -29ந் தேதிகளில்  நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது. 28ந் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு தமிழ்நாடு கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா விழாவைத் தொடங்கி வைத்து பொன் விழா சிறப்பு மலரை வெளியிட்டு உரையாற்றுகிறார். சங்கத் தலைவர் கே. தனபால் விழவிற்கு தலைமையில் நடைபெறவுள்ள விழாவில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகத்தின் மேலாண்மை இயக்குனர் எம்.ஆர்த்தி, பொன்விழா அஞ்சல் தலையை வெளியிடுகிறார். தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் முதுநிலை தலைவர்  எஸ். ரத்தினவேலு மற்றும் தமிழ்நாடு குறு மற்றும் சிறுதொழில்கள் சங்கத்தின் தலைவர் எஸ். அன்புராஜன் ஆகியோர் வாழ்த்திப்பேசுகின்றனர். இதனை கண்காட்சி பிரிவு தலைவர் ஏ.ஜே. சரவணன் தெரிவித்தார். தற்போது டிடர்ஜென்ட் சோப் உற்பத்தியில் நவீன தொழில்நுட்பங்கள் வந்துள்ளன. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறைந்த செலவில் தரமான டிடர்ஜென்ட் சோப், மற்றும் பவுடர் தயாரிக்கும் வழிமுறைகளை தமிழகம், அந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் உள்ள சோப் உற்ப்பத்தியாளர்களுக்கு விளக்கவும் அதன் மூலம் சிறு டிடர்ஜென்ட் உற்பத்தி நிறுவனங்கள் வளர்ச்சியடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த கருத்தரங்கம் நடத்தப்படுவாக சங்கத்தலைவர் கே. தனபால் கூறினார்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  இன்றைய நிகழ்ச்சி 
சூரிய கிரகணத்தின்போது உணவருந்தக் கூடாது என்ற மூட நம்பிக்கையை முறியடிக்கும் நிகழ்ச்சி, காலை 9 மணி, பெரியார் திடல், வேப்பேரி சென்னை. ஏற்பாடு:திராவிடர் கழகம்