tamilnadu

தேசிய மக்கள் நீதிமன்றம் தஞ்சையில் ரூ.5.34 கோடிக்கு தீர்வு

தஞ்சாவூர் பிப்.9- தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற  மக்கள் நீதிமன்றத்தில் 975 வழக்குக ளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.5.34 கோடி  வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.  தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில், தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை  நடைபெற்றது. இதில் அனைத்து நீதி மன்றங்களிலும் நிலுவையில் இருந்த  வழக்குகளில் 983 வழக்குகள் விசா ரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. 537 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.  இவற்றில் 72 விபத்து இழப்பீட்டு  வழக்குகள் விசாரணை செய்யப்பட்டு, அனைத்து வழக்குகளிலும் ரூ. 2 கோ டியே 26 லட்சத்து 47 ஆயிரத்து 50 இழ ப்பீட்டு தொகையாக வழங்கப்பட்டது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாராக்கடன் தொகை தொடர்பான 438  வழக்குகள் விசாரிக்கப்பட்டு, ரூ.3 கோடியே 81 லட்சத்து 3 ஆயிரத்து 889-க்கு  தீர்வு காணப்பட்டது.  உரிமையியல், மோட்டார் வாகன விபத்து, குடும்ப நலம், காசோலை மற்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்காக, மாவட்ட முதன்மை நீதிபதி தலைமையில் 4 அமர்வுகள் அமைக்கப்பட்டன. முன்ன தாக, மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி வி.சிவஞானம் தொ டங்கி வைத்தார். இதில் 12 அமர்வு களாக விசாரணை நடத்தப்பட்டது.