தஞ்சாவூர் நவ.1- தஞ்சாவூர் வட்டம் கள்ளப்பெரம்பூர் ஏரியினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், ஏரியின் முழு கொள்ளளவு, தற்போது இருக்கும் நீரின் அளவு, ஏரிக்கு வரும் நீர் வரத்தின் அளவு, ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு ஆகியவை குறித்து பொதுப்பணித் துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். கள்ளப்பெரம்பூர் ஏரியிலிருந்து ராயந்தூர் வடிகால் வழியாக நீர் வெளியேறுவதை பொதுப்பணித் துறை அலு வலர்கள் முறையாக கண்காணித்திடுமாறு அறிவுறுத்தி னார். கள்ளபெரம்பூர் ஏரியிலிருந்து பாசன வசதி பெறும் நிலங்களின் பரப்பளவு குறித்தும், பாசன நிலங்களில் பயிர் செய்யப்பட்டுள்ள விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார். முன்னதாக, செங்கிப்பட்டி ஏரியினை பார்வையிட்ட மாவட்ட அவர், ஏரியின் முழு கொள்ளளவு, நீர் இருப்பு, நீர்வரத்து, நீர் வெளியேற்றம் ஆகியவற்றின் அளவுகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார். ஆய்வின் போது, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அய்யம்பெருமாள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பொ.சுருளிபிரபு மற்றும் பொதுப்பணித்துறை அலுவ லர்கள் உடன் இருந்தனர்.