tamilnadu

img

புற்று நோய் பாதித்தவர்களுக்கு உதவி

கும்பகோணம்: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் கும்பகோ ணம் ஆயுள் காப்பீட்டுக் கழக கிளை-2 சார்பில்  திம்மங்குடி அன்னை ஆதுரகம் முடிவு நிலை புற்று நோய்க்கான இலவச மருத்துவ காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதில் பல்வேறு முடிவு நிலையிலுள்ள புற்றுநோயாளிகள் தங்கி மருத்துவ உதவி பெற்று பராமரித்து வரு கின்றனர். இந்நிறுவனத்தை மருத்துவர் தியாகராஜன் செயல்படுத்தி வருகிறார்.  இந்நிலையில் கும்பகோணம் கிளை 2 ஆயுள் காப்பீட்டு ஊழியர்கள் சார்பில் காப்ப கத்திற்கு ரூபாய் 30 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது. நிகழ்வின் போது கிளை மேலாளர் சுவாமிநாதன், துணை கிளை மேலாளர் பிரகாஷ், வளர்ச்சி அதிகாரி நரேந்திரன் ஸ்ரீவித்யா, ப்ரீத்தா, நந்தினி, கலைச்செல்வி, விஜயா, சுபஸ்ரீ கோட்ட இணை செயலாளர் சேகர், துணைதலைவர் சுப்ரமணியன், சுரேஷ் ராஜா லிகாய் குழந்தைவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.