states

img

இயற்கை பேரழிவு நிவாரணத்திற்காக கேரள அரசு வழங்கியது ரூ. 735.13 கோடி... உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்தோருக்கும் உதவி....

திருவனந்தபுரம்:
இயற்கைப் பேரிடரில் சிக்கியவர்களுக்கு நாட்டிலேயே மிக அதிகமாக நிவாரணம் வழங்கியது கேரளம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

2019 பருவ மழையின்போது ஏற்பட்ட நிலச்சரிவுகளால் சேதமடைந்த வீடுகளை புனரமைப்பதற்கும் முகாம்களில் தங்கியிருந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் ரூ. 735 கோடியே 13 லட்சத்து53 ஆயிரத்து 300 செலவிடப்பட் டுள்ளது. 62 ஆயிரத்து 245 வீடுகளை புனரமைத்து பழுது பார்ப்பதற்காக மட்டும்ரூ. 372 கோடியே 30 லட்சத்து 53 ஆயிரத்து 300 வழங்கப்பட்டுள்ளது.நிவாரண முகாம்களில் தங்கியிருந்தவர்களுக்கும், உறவினர்களின் வீடுகளில் தங்கியிருந்தவர் களுக்கும் அவசர கால நிவாரண
மாக தலா ரூ.10 ஆயிரம் வழங்கப் பட்டுள்ளது.அரசாங்கத்தால் நடத்தப்படும் முகாம்களில் 1,44,077 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டனர். அவர் களுக்கு மட்டும் அவசர நிதி உதவியாக ரூ. 144 கோடியே 7 லட்சத்து 70 ஆயிரம் வழங்கப்பட்டது. உறவினர் வீடுகளில் குடியேறியவர்களுக்கும் முதன்முறையாக உதவி அளிக்கப்பட்டது. இந்த வகையில், 2 லட்சத்து 18 ஆயிரத்து 753பேருக்கு ரூ. 218 கோடியே 75 லட் சத்து 30 ஆயிரம் வழங்கப்பட்டது. 

இந்த பேரழிவில் மொத்தம் 62 ஆயிரத்து 245 வீடுகள் சேதமடைந்தன. இவற்றில் 3349 வீடுகள் முற்றிலுமாக அழிந்தன (74 சதவிகிதத்திற்கு மேல்). ‘லைப்’ திட்டத்தைப் போலவே இந்த வீடுகளுக்கும் ரூ. 4 லட்சம் வழங்கப்பட்டது. ஓரளவு இடிந்த வீடுகளுக்கு பல்வேறு நிலைகளைப் பொறுத்து ரூ. 10 ஆயிரம் முதல் ரூ .2.5 லட்சம் வரைவழங்கப்பட்டது.முதல்வரின் பேரிடர் நிவாரண நிதியம் (Chief Minister’s Distress Relief Fund -CMDRF) மற்றும் மாநில பேரிடர் மறுவாழ்வு நிதியம் (State Disaster Response Fund- SDRF) ஆகியவை இதற்கான நிதியுதவியை வழங்கின. இதற்கான செயல்முறை அனைத்தும் ஆன்லைனிலேயே மேற்கொள்ளப்பட்டது. இடைத்தரகர் நீக்கப்பட்டு பணம் நேரடியாக பயனாளிகளின் கணக்கிற்கு மாற்றப் பட்டது. வங்கிக் கணக்கில் தொழில்நுட்பசிக்கல் காரணமாக, இன்னும் சிலருக்கு உதவி கிடைக்க வேண்டியிருந்தாலும், அதிகாரிகள் அவர் களைச் சந்தித்து பிரச்சனையைத் தீர்த்து வருகின்றனர். விரைவில் அவர்களின் கணக்கிலும் பணம் வரவுவைக்கப்படும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.