கும்பகோணம், டிச.8- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு போக்குவரத்து தொழிலா ளர்கள் சங்க (சிஐடியு ) மத்திய சங்க இணைச் செயலாளர் மற்றும் கூட்டுறவு வீடு கட்டும் சங்க இயக்குனருமான வீ. மகேந்திரன் சகோ தரியும் கோழியக்குடி வீராச்சாமி -சரோஜா இவர்களின் மகள் மங்கையர்க்கரசி, சாத்தனூர் நாகராஜன்- வசந்தா ஆகியோர் மகன் நா. கோபிநாத் ஆகியோருக்கு திருமணம் சோழபுரத்தில் நடை பெற்றது. விழாவில் சிஐடியு மாவட்டச் செயலாளர் சி. ஜெயபால், அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் ஜி. மணி மாறன், பொருளாளர் தாமோதரன், துணைத்தலைவர் ஆர்.வெங்கடா சலபதி உள்ளிட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் சிபிஎம் உள்ளிட்ட அனைத்துக் கட்சி பிரமுகர்கள் உறவினர்கள் நண்பர்கள் மண மக்களை வாழ்த்தினர். விழாவில் சென்னை நிர்மல் பள்ளிக்கு மணமக்கள் சார்பாக ரூபாய் 3000 நன்கொடையாக வழங்கப் பட்டது.