tamilnadu

img

பழிவாங்கும் நடவடிக்கையை கைவிடுக! தஞ்சாவூரில் ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், செப்.11- ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் அருகே திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் இளையராஜா தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கோதண்ட பாணி வாழ்த்திப் பேசினார். ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் இரா.அழகர், பொருளா ளர் கே.மதியழகன், மாநிலப் பொதுக் குழு உறுப்பினர் ஜி.கார்த்திகேயன், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் ஆர்.பெரி யசாமி, மாவட்டத் தலைவர் முரளி தரன், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மாவட்ட பொரு ளாளர் இளையராஜா, தனியார் பள்ளி கள் செயலாளர் ஏ.ராஜா உள்ளிட் டோர் பேசினர்.  ஆர்ப்பாட்டத்தில், “ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரி யர்கள், அரசு ஊழியர்கள், பணியா ளர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள 17-பி ஒழுங்கு நடவடிக்கைகள், பணி மாறு தல்களை ரத்து செய்ய வேண்டும். காவல்துறையால் புனையப்பட்டுள்ள குற்ற வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்.  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவரும், ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளருமான மு. சுப்பிரமணியன் பணி ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் செய் ததை ரத்து செய்ய வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப் பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;