tamilnadu

img

10 நாளாக குடிநீர் வரவில்லை: கிராம மக்கள் மறியல்

தஞ்சாவூர், செப்.19–  தஞ்சையில் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியின் ஆழ்துளைக்கிணறு பழு தாகி பத்து நாளாக தண்ணீர் வராததை கண்டித்து, கிராம மக்கள் புதன்கிழமை மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் அடுத்த காசவளநாடு புதூர் கிராமத்தில், சுமார் 400 குடும்பங் கள் உள்ளன. இவர்களின் குடிநீர் தேவைக்காக, செங்கரை என்னும் இடத்தில் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியின் ஆழ்துளைக்கிணறு, கடந்த 10 நாட்க ளுக்கு முன்பு பழுதானது. இதை தொடர்ந்து அப்பகுதியினர் அதிகாரி களிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் பத்து நாட்களாக சீர் செய்ய தரப்பட வில்லை.  இந்நிலையில், பத்து நாளும், அரு கில் விவசாயத்திற்காக பயன்படுத்தப் படும் பம்புசெட்டிலும், பக்கத்து ஊர் களுக்கு சென்றும் தண்ணீர் பிடித்து வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த கிராமத்தினர், புதன்கிழமை மாலை 5 மணிக்கு தஞ்சை – பட்டுக்கோட்டை மெயின் ரோட்டில், பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடு பட்டனர். இதில், 250க்கும் மேற்பட்ட வர்கள் ஈடுபட்டனர்.  இதை தொடர்ந்து சம்பவ இடத் திற்கு வந்த காவல்துறையினர், வட்டார வளர்ச்சி அலுவலர் சூரியநாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள் கிராம மக்களி டம் பேச்சுவார்த்தை நடத்தி, முதற்கட்ட மாக டேங்கர் லாரியில் தண்ணீர் அனுப்பி வைத்தனர். இதையடுத்து மறி யலை கைவிட்டு கலைந்து சென்றனர்.