tamilnadu

img

மூதாட்டியின் சேவைக்கு கிடைத்த அழகி குளத்தில் 50 ஆண்டுக்கு பின் விழா தஞ்சை மக்களின் நெகிழ்ச்சி சம்பவம்

தஞ்சாவூர் ஆக.4-  ராஜராஜசோழன் ஆட்சிகாலத்தில் வெட்ட ப்பட்ட குளத்தை பொதுமக்கள் முயற்சி செய்து தங்கள் சொந்த செலவில் தூர் வாரி யதுடன், லாரி மூலம் தண்ணீர் நிரப்பி அந்த  குளத்திலேயே ஆடிப்பெருக்கை கொண்டாடி னர்.  தஞ்சாவூர் மையப்பகுதியில் 3 ஏக்கர் பர ப்பளவில் உள்ளது அழகி குளம். இக்குளம் ராஜராஜசோழன் காலத்தில் வெட்டப்பட்டது. அழகி என்னும் இடையர் குல மூதாட்டி தன்னால் இயன்ற தொண்டாக பெரிய கோவில் கட்டி முடிக்கும் வரை பணி யாளர்களின் தாகத்தை தீர்க்கும் பொருட்டு தினமும் அவர்களுக்கு தயிர், மோர் வழங்கி  வந்தார்.  மேலும் கோவில் விமானத்தில் வைத்து ள்ள இடைச்சிக்கல் அழகி வீட்டிலிருந்து எடுத்து வந்ததாலும், அவருக்கு ராஜராஜ சோழன் மூதாட்டியின் சிவத் தொண்டை பார்த்து, அந்த மூதாட்டிக்கு தீர்வையின்றி அழகி குளத்தை பதிவு செய்து கொடுத்தான் என்றும் வரலாற்று பதிவுகளில் கூற ப்படுகிறது.  இந்த குளத்துக்கு கல்லணை கால்வா யில் இருந்தும், ராணி வாய்க்கால் மூலம்  தண்ணீர் வர நீர்வழிப் பாதைகள் இருந்து ள்ளன. பின்னர், ஆக்கிரமிப்புகளால், கருவேல மரங்கள் மண்டியும், குப்பை மேடாக வும் மாறிவிட்டன. இதை தொடர்ந்து அப்பகு தியை பாம்பாட்டித்தெரு, கவாஸ்காரத் தெரு உள்ளிட்ட தெருவாசிகள் இணைந்து குளத்தில் உள்ள கருவேல மரங்களை அகற்றி னர். பின்னர் பொதுமக்களிடம் நிதி வசூலித்து  தூர்வாரினர். இந்நிலையில், அழகி குளத்தை சுற்றி யுள்ள மக்கள் குளத்திலேயே ஆடிப் பெரு க்கை கொண்டாட முடிவு செய்தனர். இதற்காக குளத்தின் மைய பகுதியில் உள்ள பள்ளத்தில் 5 லாரிகளின் மூலம் தண்ணீரை நிர ப்பினர். முன்னதாக பொதுமக்கள் ஆடி பெரு க்கை இங்கேயே கொண்டாட வேண்டும் என வெள்ளிக்கிழமை தண்டோரா மூலம் அறி வித்தனர்.  இதையடுத்து ஆடிப்பெருக்கு தினமான சனிக்கிழமை காலை முதலே ஏராளமான பெண்கள் திரண்டு வந்து படையலிட்டு ஆடி  பெருக்கை கொண்டாடி மகிழ்ந்தனர். 50  ஆண்டுக்கு பிறகு அழகிகுளம் விழா கோலம்  கண்டதை காண்பதற்கு ஏராளமானவர்கள் வந்து சென்றனர்.

;