தஞ்சாவூர் நவ.14- சென்னையில் கடந்த நவ.11 ஆம் தேதி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் தி.க தலைமைச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பேராவூரணி, பட்டுக்கோட்டை, சேதுபாவாசத்திரம், மதுக்கூர் ஒன்றி யங்களை உள்ளடக்கிய பட்டுக்கோட்டை கழக மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மாவட்டத் தலைவராக அத்திவெட்டி பெ.வீரை யன், மாவட்டச் செயலாளராக பேராவூரணி வை.சிதம்ப ரம், மாவட்ட துணைத் தலைவராக பட்டுக்கோட்டை ச.சின்னக்கண்ணு, மாவட்ட துணைச் செயலாளராக பேராவூரணி இரா.நீலகண்டன், மாவட்ட அமைப்பாளராக பேராவூரணி சோம.நீலகண்டன், பொதுக்குழு உறுப்பினராக பள்ளத்தூர் அரு.நல்லதம்பி, மாவட்ட இளைஞரணி தலைவராக பேராவூரணி அ.பாலசுப்பிரமணியன் நியமிக் கப்பட்டுள்ளனர். மாவட்டச் செயலாளராக தேர்வு செய் யப்பட்ட மல்லிகை வை.சிதம்பரம் பெரியார் சிலைக்கு கட்சியினருடன் சென்று மாலை அணிவித்தார்.