tamilnadu

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஏப்.13-28 வரை நடைபயணம் இரா.முத்தரசன் பேட்டி

தஞ்சாவூர், மார்ச் 11-  குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதி ராக திருச்சியிலிருந்து வேதாரண்யம் வரை  ஏப்ரல் 13 - 28 ஆம் தேதி வரை நடைபயணம் மேற்கொள்ளப்பட உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் தெரிவித்ததாவது: மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாளுக்கு நாள் போரா ட்டம் வலுவடைந்து வருகிறது. இதை யாரும்  தூண்டவில்லை; தன்னெழுச்சியாக நடைபெ றுகிறது. ஆனால், இதை மத்திய அரசு ஏற்கத்  தயாராக இல்லை. எனவே, விடுதலைப் போராட்டக் கால த்தில் மேற்கொள்ளப்பட்ட ஒத்துழையாமை இயக்கம் போல, தேசிய குடிமக்கள் பதிவே டுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்புக் கொடு க்கக் கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்து வருகிறது. இதை வலியுறுத்தி ஒவ்வொரு மாவட்டத்திலும் மார்ச் இறுதிக்குள் சமூக நல்லிணக்க மாநாடு நடத்தவுள்ளோம்.   மேலும், விடுதலைப் போராட்டக் கால த்தில் 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திருச்சியிலிருந்து வேதாரண்யத்துக்கு உப்பு சத்தியாக்கிரக பாதயாத்திரை மேற்கொ ள்ளப்பட்டது. அதுபோல, குடியுரிமை திரு த்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடுக்கு எதிராக  ஏப். 13 முதல் 28 ஆம் தேதி வரை திருச்சியி லிருந்து வேதாரண்யத்துக்கு நடைபயணம் மேற்கொள்ள உள்ளோம். இதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு தரக் கேட்டுக்  கொள்கிறோம். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக  ஜனநாயக முறையில் மேற்கொள்ளப்படும் போராட்டத்துக்குத் தமிழக அரசு அனுமதி மறுக்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக விழிப்புணர்வு கூட்டம் நடத்தினால் கூட வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. இதுபோன்ற அடக்குமுறைகளைத் தமிழக அரசுக் கைவிட வேண்டும். ஜனநாயக உரிமையைப் பறிக்கக் கூடாது.  ஆனால், அதேநேரத்தில் மத வன்மு றையைத் தூண்டும் வகையில் பேசி வரும் எச்.  ராஜா, பொன். ராதாகிருஷ்ணன் போன்ற வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், இதுவரை தமிழக அரசு எந்த நடவடி க்கையும் எடுக்கவில்லை. மத கலவரம் மூலம்  அரசியல் ஆதாயம் தேட பாஜக முயற்சிக்கி றது. குஜராத்தை போல தமிழ்நாட்டையும் மாற்ற பாஜக விரும்புகிறது. இதை தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது வருத்தமளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

;